என் தமிழ்

மலேசிய இந்து சங்கத்தின் தேசிய திருமுறை குழு : 2027ஆம் ஆண்டுக்கான நடுவர்கள், பொறுப்பாளர்கள் பதிவு தொடக்கம்

கோலாலம்பூர், 16 அக்டோபர் 2026 : மலேசிய இந்து சங்கத்தின் தேசிய திருமுறை குழு, 2027ஆம் ஆண்டுக்கான திருமுறைப் போட்டிகளின் நடுவர்கள் மற்றும் பொறுப்பாளர்களைப் பதிவு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதிவில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். மேலும், திருமுறை ஆசிரியர்கள் மற்றும் தமிழ் மொழியைப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்வதற்கான இறுதி நாள் 2026 அக்டோபர் 31 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவானது நடுவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கானது மட்டுமே என்றும், போட்டியாளர்கள் இப்பதிவின் கீழ் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தேசிய திருமுறை குழு தெளிவுபடுத்தியுள்ளது.

Scroll to Top