கோலாலம்பூர், 15 அக்டோபர் 2026 : மலேசியா சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் மன்றமான MSRFC (Malaysia Superstar Rajini Fan Club) சார்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) அக்டோபர் 15, 2026 அன்று மலேசியாவில் நடைபெற்றது.
கோலாலம்பூரில் உள்ள Damansara Heights பகுதியில் அமைந்துள்ள TGV Pavilion திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வை, MSRFC மன்றத் தலைவர் திரு. விஜய் தலைமையில் ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மலேசிய ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தையும் அவர்களது நட்சத்திரத்தின் மீதான அன்பையும் வெளிப்படுத்தியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் எழுதி இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.










