சென்னை, 04 செப்டம்பர் 2026 : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘இம்மார்டல்’ (IMMORTAL) இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது.
‘இம்மார்டல்’ திரைப்படத்தை மரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். திரைப்படத்தை அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ளார்.
திரைப்படத்தின் வெளியீட்டை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட கதைக்களத்தை படம் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பை போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.
மாலை நேரப் பின்னணியில் இருவரும் பூங்கா இருக்கையில் அமர்ந்து உரையாடும் காட்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டர், படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்களை வெளிப்படுத்துகிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவை அருண் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ராஜேஷ் எம்., கலை இயக்கத்தை சிவசங்கர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் கவனித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘இம்மார்டல்’ திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.











