04 செப்டம்பர் 2026 : SUKIPT 2026 போட்டியின் மூன்றாம் நாள் தடகளப் பிரிவில் நடைபெற்ற பெண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டத்தில் TARUMT வீராங்கனை எஸ்தர் ஜாய் சென் ஹொங் லி புதிய போட்டி சாதனையைப் படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
எஸ்தர் ஜாய் 18 நிமிடங்கள் 02.82 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து முதலிடம் பிடித்தார். UCSI பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டியோ சே ஹுய் 20:22.05 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கமும், Monash பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேலா ஆரியா லின்-கியான் சைபெல் 20:28.56 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இதன் மூலம் எஸ்தர் ஜாய், 2022ஆம் ஆண்டு UNITAR சார்பில் பங்கேற்றபோது தானே பதிவு செய்த 19:57.68 வினாடிகள் என்ற முந்தைய போட்டி சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.







