என் தமிழ்

SJKT : கேஸ்டில்ஃபீல்டு தேசிய வகை தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அபாகஸ், கணிதப் போட்டியில் சாதனை

புத்ராஜெயா, 03 செப்டம்பர் 2026 : புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் கடந்த 30 ஆகஸ்ட் 2026 அன்று நடைபெற்ற HONOUR CUP Abacus Mental Maths & Mathematics Championship 2026 போட்டியில், தேசிய வகை கேஸ்டில்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

பள்ளியின் மூன்று மாணவர்கள் அபாகஸ், மனக்கணிதம் மற்றும் கணிதப் பிரிவுகளில் சிறப்பான நிலைகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 4 பைந்தமிழ் வகுப்பைச் சேர்ந்த 10 வயது மாணவி சத்விகா சந்திரசேகர், Rookie (Abacus) பிரிவில் 3ஆம் இடத்தையும், Mental Maths பிரிவில் 5ஆம் இடத்தையும் பெற்றார்.

6 இளந்தமிழ் வகுப்பைச் சேர்ந்த 12 வயது மாணவர் ரோஷன் சந்திரசேகர், Rookie (Abacus) பிரிவில் 3ஆம் இடமும், Mental Maths பிரிவில் 5ஆம் இடமும், Mathematics பிரிவில் 5ஆம் இடமும் பெற்று சிறப்பித்தார். அதேபோல், 6 பைந்தமிழ் வகுப்பைச் சேர்ந்த 12 வயது மாணவர் நிவேஷ் சர்குணன், Rookie (Abacus) பிரிவில் 3ஆம் இடத்தையும், Mathematics பிரிவில் 5ஆம் இடத்தையும் பெற்றார்.

மாணவர்களின் இந்தச் சிறப்பான சாதனைக்காக தேசிய வகை கேஸ்டில்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தொடர்ந்து தங்களது கல்வித் திறனை மேம்படுத்தி, மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் வாழ்த்தப்பட்டுள்ளது.

Scroll to Top