என் தமிழ்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியாவின் முதல் தங்கம் : முகமது அனீக்குக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

கோலாலம்பூர், 27 ஜூலை 2026 : கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்ற பளுதூக்கும் வீரர் முகமது அனீக் கஸ்டானுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் 273 கிலோ எடையைத் தூக்கி, காமன்வெல்த் போட்டி சாதனையையும் படைத்த முகமது அனீக், மலேசியாவின் தங்கப் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் அன்வார், நாட்டிற்குப் பெருமை சேர்த்த முகமது அனீக்கின் அபார சாதனையைப் பாராட்டியதுடன், அவரது வெற்றி முழு மலேசிய மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கிளாஸ்கோவில் போட்டியிடும் அனைத்து மலேசிய வீரர், வீராங்கனைகளுக்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.

முகமது அனீக்கின் வெற்றி, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசிய அணியின் பதக்க வேட்டைக்கு உற்சாகமான தொடக்கமாக அமைந்துள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Scroll to Top