15 ஜூன் 2026 : முழுமையான நல்வாழ்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “The Art of Balance: Holistic Vision of Wellbeing” என்ற நூலின் வெளியீட்டு விழா மலாயா பல்கலைக்கழகத்தின் ஆசியா-ஐரோப்பா கல்வி நிறுவன அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நூலை மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
முனைவர் அனுராதா இராஜசேகரம் மற்றும் முனைவர் செல்வஜோதி இராமலிங்கம் ஆகியோர் இணைந்து இந்நூலை எழுதியுள்ளனர். உடல், மனம் மற்றும் சமூக நலன்களை ஒருங்கிணைக்கும் முழுமையான நல்வாழ்வு குறித்த பார்வைகளை இந்நூல் எடுத்துரைக்கிறது



நிகழ்விற்கு மதிப்புமிகு டத்தோ பா. சகாதேவன் ஆதரவு வழங்கினார். நூல் ஆய்வுரையை தமிழ்த்திரு சி. மு. அண்ணாதுரை வழங்கியதுடன், நூலின் உள்ளடக்கம் மற்றும் அதன் சமூகப் பயன்கள் குறித்து விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
மேலும், தமிழ்த்திரு அகல்யா தர்மலிங்கம் சிறப்புப் பகிர்வு நிகழ்வில் உரையாற்றி, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை சமநிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அறிகம் (ASSIST) மற்றும் PPUM இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, அறிவுப் பகிர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அமைந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.







