என் தமிழ்

சுக்மா மற்றும் பாரா சுக்மா 2026 : சிலாங்கூரில் தொடங்கியது டார்ச் ரன் பயணம்

14 ஜூன் 2026 : சுக்மா மற்றும் பாரா சுக்மா 2026 போட்டிகளை முன்னிட்டு நடத்தப்படும் டார்ச் ரன் (Torch Run) நிகழ்வின் தொடக்க விழா, சபாக் பெர்னாம் மாவட்டத்தில் உள்ள டத்தாரான் பிகான் சுங்காய் பெசாரில் உற்சாகமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவருடன், சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் (MSNS) நிர்வாக இயக்குநர் முகமட் நிஜாம் மர்ஜுகி, கிராமப்புற மேம்பாடு, ஒற்றுமை மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹாஜி ரிசாம் இஸ்மாயில், சபாக் பெர்னாம் மாவட்ட மன்றத் தலைவர் அவலுதீன் ஜகாரியா மற்றும் சுக்மா XXII மற்றும் பாரா சுக்மா சிலாங்கூர் 2026 தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமட் யாசித் சாய்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுக்மா மற்றும் பாரா சுக்மா போட்டிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாநில மக்களிடையே விளையாட்டு உணர்வை ஊக்குவிப்பதே இந்த டார்ச் ரன் நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

வரவிருக்கும் சுக்மா 2026 போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான மாநிலத்தின் தயார்நிலையையும், விளையாட்டு மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்துவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Scroll to Top