என் தமிழ்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: வெற்றியுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பி.வி. சிந்து

சிட்னி, 10 ஜூன் 2026 : ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியுடன் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். முதல் சுற்று ஆட்டத்தில் பெருவின் இனெஸ் காஸ்டிலோவை நேர்செட் கணக்கில் வீழ்த்தி அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள சிந்து, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 32 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்த அவர், 21-13, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சிந்து, போட்டியின் இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்த சுற்றில் சக இந்திய வீராங்கனையான இஷாராணி பருவாவை அவர் எதிர்கொள்ள உள்ளார்.

இந்திய மகளிர் பிரிவில் தன்வி ஷர்மா, மாளவிகா பன்சோட் உள்ளிட்ட வீராங்கனைகளும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளதால், இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் உற்சாகமான தொடக்கம் கிடைத்துள்ளது.

Scroll to Top