கோலாலம்பூர், 21 மே 2026 : திரைக்கதை எழுதுவது மற்றும் நடிப்பு துறையில் ஆர்வமுள்ளவர்களுக்காக சிறப்பு “ஸ்கிரீன்ப்ளே ரைட்டிங் & ஆக்டிங் மாஸ்டர்கிளாஸ்” நிகழ்ச்சி வரும் மே 30ஆம் தேதி டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
Sa Pai Sa Production மற்றும் GO WIN Global Event Management இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த பயிற்சி முகாமை, 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இயக்குநர் மற்றும் நடிகரான திரு. கோவிந்த் சிங் வழிநடத்தவுள்ளார்.
இந்த மாஸ்டர்கிளாஸ் நிகழ்ச்சியில், தொழில்துறை வல்லுநர்கள் சிறப்பு விருந்தினர் பேச்சாளர்களாக கலந்துகொண்டு, திரைக்கதை உருவாக்கம், நடிப்பு திறன் மேம்பாடு மற்றும் திரைப்படத் துறையின் நடைமுறை அனுபவங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கவுள்ளனர்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, திரைப்பட மற்றும் நாடகத் துறையில் தங்களை மேம்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்கேற்பதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், மேலதிக தகவல்களுக்கு +60 16-445 7257 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




