இளைய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலிமையாக்கும் வேளாண்மை எனும் தலைப்பில் ”நாம்” இளைஞர்களுக்கான வேளாண்மை கருத்தரங்கம் கடந்த 11/09/2014 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கோலாலம்பூரில் உள்ள க்ராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதியில் நடபெற்றது. விழாவை விவசாயம் மற்றும் விவசாயத் தொழில் துறை அமைச்சகம் ”நாம்” அறவாரியத்துடன் சேந்து ஏற்பாடு செய்திருந்தது. விழாவை விவசாயம் மற்றும் விவசாயத் தொழில் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யகோப் துவங்கி வைத்தார். மேலும் “நாம்” அறவாரியத்தின் தலைவர் மற்றும் இளைஞர் மற்றும் விவசாயத் துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் அவர்களும் கலந்து கொண்டார். கருத்தரங்கில் “நாம்” அறவாரியத்தின் நிர்வாகிகள் “நாம்” அறவாரியத்தின் இளைஞர் பிரிவு நிர்வாகிகள் உட்பட சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். விழாவில் அதிக கொள்முதல் ஈட்டிய விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கிவிக்கப்பட்டது.