சிலாங்கூர், 30 ஏப்ரல் 2026 : சிலாங்கூர் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான LIMAS (Non-Islamic Religious Affairs Committee) சிறப்பு குழுவின் 2/2026ஆம் கூட்டம் இன்று (30-04-2026, வியாழக்கிழமை) காலை, SUK சிலாங்கூரில் உள்ள கெக்வா (Kekwa) கூட்டறையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு LIMAS குழுக் கூட்டத்திற்கு மாநில நிர்வாக சபை உறுப்பினர்களான என் ஜி சீ ஹான், என் ஜி சூ லிம் மற்றும் பாப்பாராய்டு வர்மன் ஆகியோர் இணைத் தலைவர்களாக தலைமை வகித்தனர். மேலும், புவா பே லிங் மற்றும் Dr. குணராஜ் ஜார்ஜ் ஆகியோரும் குழு உறுப்பினர்களாக கலந்துகொண்டனர்.
LIMAS குழு, சிலாங்கூர் மாநில அரசின் அதிகாரப்பூர்வ தளமாக இருந்து, புத்தம், கிறிஸ்துவம், இந்து, சிக் மற்றும் தாவோ போன்ற இஸ்லாமிய அல்லாத மதங்களுக்கான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் முக்கியப் பங்காற்றுகிறது.
மேலும், இக்குழு, இஸ்லாமிய அல்லாத வழிபாட்டு தலங்களின் மேம்பாடு தொடர்பான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து பரிந்துரைக்கும் பணியையும் மேற்கொள்கிறது. குறிப்பாக, வழிபாட்டு தலங்களுக்கான நில ஒதுக்கீடு, நில நிலைமை, அனுமதிகள் (licensing), மற்றும் தொடர்புடைய பொது வசதிகளின் பராமரிப்பு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.





