கொலம்பியாவில் விமானம் விபத்து 10 பேர் பலி

கொலம்பியாவில் விமானம் விபத்து 10 பேர் பலி

colombia

தென்அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் அராராகுராவில் இருந்து புளோரென்சிகாவுக்கு ஒரு குட்டி விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செயதனர். அவர்களில் 2 பேர் விமானிகள்.

இந்த விமானம் மாலை 3 மணியளவில் திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை இழந்தது. இதனால் அந்த விமானத்தின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

எனவே அதை தேடும் பணி நடந்தது. இந்த நிலையில் அது தென்மேற்கில் புயர்டேர் சன்டான்டர் பகுதியில் உள்ள ஒரு காட்டில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அங்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். இந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேரும் பலியாகினர். இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.