என் தமிழ்

இந்தியாவுக்கு துப்பாக்கிகளை வழங்கிய இஸ்ரேல் நிறுவனம்

இஸ்ரேல்,  02 ஏப்ரல் 2026 : இஸ்ரேலைச் சேர்ந்த Israel Weapon Industries (IWI) நிறுவனம், இந்திய ராணுவத்துக்கு ‘நெகவ் 7.62 மி.மீ.’ இலகு இயந்திரத் துப்பாக்கிகளை வழங்க ஒப்பந்தம் செய்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் Make in India முயற்சியின் கீழ், Adani Defence and Aerospace நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.

மொத்தம் 41,000 துப்பாக்கிகள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 2,000 துப்பாக்கிகள் இரு நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டு கடந்த மாதம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்திய IWI நிறுவனம், தொழில்நுட்ப பரிமாற்ற செயல்முறை வெற்றிகரமாக நிறைவு பெற்றதே இந்த சாதனைக்கு காரணம் என தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த கட்டமாக 4,000 துப்பாக்கிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டாண்மை, இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Scroll to Top