தெஹ்ரான், 01 மார்ச் 2026 : ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் நேற்று தீவிர தாக்குதல் நடத்தின. ஈரானின் அணுசக்தி நிலையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்பத்தினர், பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் மற்றும் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் தெஹ்ரானில் சயது காண்டின், குவாசர், வனக் சதுக்கம், மொடஹரி வீதி உள்ளிட்ட பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.





