என் தமிழ்

20 ஆண்டுகளைக் கடந்து புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது மின்னல் பண்பலை

மலேசியா, 14 ஜனவரி 2026 : மலேசிய இந்தியர்களின் முதன்மைத் தேர்வாக விளங்கும் மின்னல் பண்பலை, நாளை 15-01-2026 வியாழக்கிழமை, பொங்கலன்று, மின்னல் நிகழ்ச்சிகளின் பெயர் மாற்றத்தையும், புதிய நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்கிறது.  அதே வேளையில், சில நிகழ்ச்சிகளின் நேரமும் மாற்றம் காணவுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, காலத்திற்கு ஏற்றவாறு, இந்த மாற்றம் அமைகிறது, என மின்னல் பண்பலை  தலைவர் திரு எஸ் குமரன் குறிப்பிட்டார்.

பழையப் பெயர்கள்புதியப் பெயர்கள்நேரம்
  காலைக்கதிர்  வணக்கம் மின்னல்  காலை 6.00-10.00
  உல்லாசம் உற்சாகம்  இளமை உல்லாசம்  காலை 10.00-மதியம் 1
  எண்ணங்கள் வண்ணங்கள்  இசையும் இசையும்  மதியம் 1- மாலை 4
  ஆனந்த தேன்காற்று  தீரா இசை  மாலை 4 இரவு 8
  நட்சத்திர மேகம்  காற்றின் மொழி  இரவு 8- நள்ளிரவு 12
  தாலாட்டுதே வானம் / உதய காலம்    மின்னலின் இடை விடா இசை  நள்ளிரவு 12- காலை 6

ஒரு நேயர் அறிவிப்பாளராகிறார் எனும் நிகழ்ச்சி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ‘ஒரு நேயரின் குரல்’ என அறிமுகமாகிறது.  இவ்வாரப் பிரமுகர், நமது விருந்தினர் எனும் பெயரில் களம் காண்கிறது. மலேசியக் கலைஞர்களின் பாடல்கள், நேர்காணல்கள் என 2 மணி நேரம் இது நம்ம, நேரம், மண்ணின் நட்சத்திரம் புதிய அமைப்பில் ஒலிபரப்பாகவுள்ளது.

அரசாங்கத் தகவல்களை உடனுக்குடன் வழங்கும் அதே வேளையில், இளைஞர்களுக்கு உறவுப்பாலமாக மின்னல் பண்பலை  அமையும் என திரு குமரன் தெரிவித்துள்ளார். மேலும், சிறு, வணிகர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அவர்களின் அனுபவப் பகிர்வுகளும், வணிகர் எனும் நிகழ்ச்சியின் வழி அறிமுகமாகும்.  இந்த மாற்றங்கள், மக்களிடையே ஒரு நெருக்கதை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, மொழி, சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு இவை அனைத்தையும் இளைஞர்களுக்கு வித்திடும் வகையில் மின்னல் புதுப்பொலிவோடு செயல்படும் என்றார் குமரன்.

‘புதிய மாற்றங்களோடு உங்கள் மின்னல்’எனும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, ஒற்றுமைத் துணையமைச்சர் மாண்புமிகு யுனேஸ்வரன், தொடர்பு அமைச்சின், துணைத் தலைமைச் செயலாளர், திரு மனோ வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Scroll to Top