என் தமிழ்

மலேசியத் தமிழர் சங்கக் குழுவினருக்கு செருமநல்லூர் மனவளக்கலை மன்றத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர்

தஞ்சாவூர்[இந்தியா], 07 ஜனவரி 2026 : மலேசியத் தமிழர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 24 நபர் கொண்ட குழு அயலகத் தமிழர் விழா 2026 இல் கலந்து கொள்ள தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களின் பயணத்தின் ஒரு பகுதியாக 06 ஜனவரி 2026 அன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம் செருமநல்லூர் கிராமத்திற்கு வருகை புரிந்திருந்தனர். செருமநல்லூர் மனவளக்கலை மன்றத்தினர் மலேசியத் தமிழர் சங்க குழுவினருக்கு வான வேடிக்கையுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செருமநல்லூர் மனவளக்கலை மன்றத்தினர் விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகலை பரிமாறிக் கொண்டனர். செருமநல்லூர் மனவளக்கலை மன்றத்தினர் மலேசியத் தமிழ் சங்கக் குழுவினருக்கு இன்சுவை விருந்து வழங்கினர்.

து.பாலமுருகன் மற்றும் க.ராமலிங்கம் ஏற்பாட்டில் செருமநல்லூர் மனவளக்கலை மன்றத்தினர் வழங்கிய இந்த வரவேற்பு மற்றும் விருந்திற்கு மலேசிய தமிழர் சங்கத்தினர் தங்களின் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

Scroll to Top