சென்னை, 04 டிசம்பர் 2026 : மலேசியத் தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் 23 பேர் அடங்கிய குழு ஒன்று தமிழ்நாடு சுற்றுலா மற்றும் அயலக தமிழர் விழா 2026 இல் கலந்துக் கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு ஒரு மரியாதை நிமித்தமான வரவேற்பு வழங்கப்பட்டது. வழங்கியவர்கள் ரோகிணி பயண நிறுவனத்தின் ஏற்பாட்டாளர்கள் குருசாமி தலைமையில் ரோகினி, சரவணன் ஆகியோர் அறங்காவலர் திரு. தங்கவேலு அவர்களுக்கும் தேசியத் தலைவர் பரமசிவம் மருதை அவர்களுக்கும் தேசிய உதவித் தலைவர் ஆறுமுகம் அவர்களுக்கும் தேசியப் பொருளாளர் பத்துமாலை அவர்களுக்கும் ரோஜாப்பூ மாலை அணிவித்து சிறப்புச் செய்தார்கள். அதோடு அந்த குழுவில் வந்த 23 பேருக்கும் பொன்னாடையையும் போத்தி மரியாதை செய்தார்கள். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தேசியத் தலைவர் அந்நிறுவனத்திற்கு சங்கம் சார்பாக நன்றி கூறிக்கொண்டார். இதனை முன் நின்று செயல்பாடுத்திய பத்து கேவ்ஸ் கிளையின் தலைவர் பாலாவிற்கு தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். இந்த சுற்றுலா பற்றியும் விளக்கிச் சொன்னார். இந்த பயணம் ஜனவரி மூன்றாம் தேதி தொடங்கி ஜனவரி 13இல் முடிவுறும். 13ஆம் இரவில் இண்டிகோ விமானம் மூலம் கோலாலம்பூர் சென்று அடையும்.







