என் தமிழ்

பலியான பயணிகளின் குடும்பங்கள் துக்கத்திலிருந்து மீள வேண்டும்

files

பலியான மலேசியப் பயணிகளில் இதுவரை மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்ட 24 பேரில், 13 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு துக்கத்திலிருந்து மீள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரொஹானி காரிம் தெரிவித்தார்.
விமான விபத்து நிகழ்ந்த நாள் தொடங்கி, உயிரிழந்தவர்களின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் வரையில் அவர்களுக்கு துக்கத்திலிருந்து மீளும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜூலை 17-ஆம் தேதி நிகழ்ந்த MH17 பேரிடரில் பலியான 298 பேரில், 43 பேர் மலேசியர்கள். இதுவரை 24 பேரின் சடலங்கள் மட்டுமே தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேரின் பெயர்கள் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top