கோலாலம்பூர், 16 நவம்பர் 2025 : சாய்ராம் சாய்பாபா துவாரகமாயி மலேசியா சங்கம், தமன்சாரா பார்லிமெண்ட் உடன் இணைந்து ஏற்பாடு செய்த உடல்நலம் மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சி 2.0 15 நவம்பர் 2025 அன்று தமன்சாரா தாமாயில் உள்ள விஸ்டா அபார்ட்மண்டில் இனிதே நடைபெற்றது. சாய்ராம் சாய்பாபா சங்கத்தின் தலைவர் திருமதி சாய் தெரசா மோகன் அவர்களின் தலைமையில் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர்.
முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணும் Fun Brain Games, Fitness Challenges, Healthy Lifestyle Tips ஆகியவை இடம்பெற்றன. சிறுவர் முதல் முதியவர் வரை இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த மக்களுக்கு பயன் தரும் இந்த நிகழ்ச்சிக்கு உதவிய YB கோபிந்த் சிங் டியோ மற்றும் YB சுரேஷ் சிங் ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

























