என் தமிழ்

பூச்சோங் ஜெயா மகா கருமாரியம்மன் ஆலயம்: ம.இ.கா. ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை அறிவிப்பு

பூச்சோங் ஜெயா, 23 நவம்பர் 2025 : பூசாட் பண்டார், பூச்சோங் ஜெயா 10வது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயம் திருப்பணிக்காக ம.இ.கா. சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை வழங்கப்படும் என்று கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அறிவித்தார்.

இவ்விழாவுடன் இணைந்த பஞ்சா ஆசான ஆதார பீட அடிக்கல் நாட்டு விழா இன்று பக்தியுடனும் மகத்துவத்துடனும் நடைபெற்றது. விழாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தவர் ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ’ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன். நிகழ்வில் பல்வேறு சமூகத் தலைவர்கள், பக்தர்கள் மற்றும் அன்பர்கள் பங்கேற்றனர்.

ம.இ.கா. சார்பில் வழங்கப்படும் இந்நன்கொடை ஆலயத் திருப்பணியை மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்திய சமூகத்தின் ஆன்மீகத்திற்கும் பாரம்பரியத்திற்கும் தொடர்ந்து ஆதரவளிக்க கட்சி முனைப்புடன் செயல்படுவது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top