என் தமிழ்

“மலேசிய கலை கலாச்சார விழா 2025”. இசை, நடனம், பாரம்பரிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் விழா

பத்து மலை, சிலாங்கூர், 12 அக்டோபர் 2025 : மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (MOTAC) மற்றும் மலேசிய உருமி மேள இசைக்கலைஞர்கள் சங்கம் இணைந்து, நாட்டின் பன்முக கலாச்சார ஒற்றுமையையும் கலை மரபுகளையும் கொண்டாடும் வகையில் “மலேசிய கலை கலாச்சார விழா 2025” என்ற பெருவிழாவை பத்து மலை வளாகத்தில் இரண்டு நாள்கள் சிறப்பாக நடத்தினர்.

இவ்விழா, “ஒரு நாடு – பல கலாச்சாரம், ஒரே ஒற்றுமை” என்ற எண்ணத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து இன மக்களையும் கலை வழியாக இணைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.

இரு நாட்கள் நீடித்த இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பாரம்பரிய கலை வடிவங்கள் இடம்பெற்றன. முக்கிய அம்சங்களில் —

சீன பாரம்பரிய கோங் இசை,
மலாய் பாரம்பரிய கொம்பாங்க்,
இந்தியர்களின் உருமி மேளம் இசை
மற்றும் உற்சாகமான திக்கிர் பாரத் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மேலும், பாரம்பரிய ஆடை அலங்காரம், கைவினைப் பொருட்கள், கலாச்சாரக் காட்சிகள், சிறுவர் விளையாட்டுகள் போன்ற பல்வேறு பிரிவுகளும் பார்வையாளர்களை கவரக்கூடியவையாக அமைந்துள்ளன.

அமைச்சகப் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது:

“இந்த விழா மலேசியாவின் பல இன மக்களிடையேயான ஒற்றுமையை இசை, நடனம் மற்றும் கலை வழியாக வெளிப்படுத்தும் மேடையாக இருக்கும. இது சுற்றுலாவையும், கலாச்சார புரிதலையும் மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சி,” என தெரிவித்தனர்.

மலேசியாவின் பண்பாட்டுக் கலவை மற்றும் கலை மரபை பெருமைப்படுத்தும் இந்த விழா, அனைத்து மக்களுக்கும் திறந்தவாயாக நடைபெறுகிறது.

Scroll to Top