என் தமிழ்

லெபோ அம்பாங் பகுதிக்கு மீண்டும் செட்டித் தெரு என பெயர் சூட்ட வேண்டும் – டத்தோ ஸ்ரீ எம். சரவணன்


கோலாலம்பூர், 13 அக்டோபர் 2025 : அக்டோபர் 11 ஆம் தேதி கோலாலம்பூர் லெபோ அம்பாங் இந்திய பாரம்பரிய வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டிலான தீபாவளி நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டார். மிகவும் சிறப்பாக உள்ளூர்க் கலைஞர்களின் ஆடல் பாடலோடு நிகழ்ச்சி கலைகட்டியது.

மலேசிய இந்தியர்கள் 3 குழுக்களாக மலேசியாவிற்கு வந்தார்கள் என்பது வரலாறு. முதலாவது தொழில்முறை நிபுணர்கள், இரண்டாவது தோட்டத்தில் பணிபுரிய வந்தவர்கள், மூன்றாமவர்கள் வணிகர்கள். குறிப்பாக நகரத்தார் சமூகத்தினர். அவர்கள் கோலாலம்பூரில் முதன்முதலில் உருவாக்கிய இடம்தான் இந்த லெபோ அம்பாங். ஆகவே கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலேஹா முஸ்தபா அவர்களிடம் இந்த இடத்தை முன்பு இருந்தது போல “செட்டித் தெரு” என்று பெயர் சூட்ட வேண்டும் எனும் வேண்டுகோளை சரவணன் முன்வைத்ததாக தெரிவித்தார். அமைச்சரும் தமது உரையில் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார் என்கின்ற தகவலையும் சரவணன் அவர்கள் கூறினார்.

வரலாறு நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அந்தந்த இடத்தில் அதன் பூர்வீகமும், தனித்துவமும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்

Scroll to Top