என் தமிழ்

ஆர்க்டிக் ஓபன் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மலேசிய மகளிர் இரட்டையர் ஜோடி அபார வெற்றி

பின்லாந்து, 12 அக்டோபர் 2025 : பின்லாந்தில் நடைபெறும் ஆர்க்டிக் ஓபன் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்  போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் பியர்லி டான் – M தின்னையா ஜோடி வெற்றி வாகை சூடி நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

பின்லாந்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மலேசிய மகளிர் இரட்டையர் அணி தங்களுக்கு எதிராக விளையாடிய ஜப்பான் ஜோடியை 21-7, 21-9 என்கிற நேர் செட்களில் வென்று சாதனை படைத்தனர். 32 நிமிடம் நடைபெற்ற இந்த போட்டியை மலேசிய ஜோடி ஆதிக்கம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

2025 இல் பியர்லி-தின்னையா ஜோடி பெறும் இரண்டாவது சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும். வாழ்த்துக்கள்.

Scroll to Top