கோலாலம்பூர், 12 அக்டோபர் 2025 – Malaysia Ayyappa Seva Sangam (MASS) மற்றும் Akhila Bharatheeya Ayyappadharma Pracharasabha இணைந்து “Unity in Devotion” எனும் தலைப்பில் சிறப்பான Ayyappan Seva Conference 2025 ஐ வெற்றிகரமாக நடத்தின.
இந்நிகழ்வில், தலைமை விருந்தினராக டத்தோ ஏ.கோகிலன் பிள்ளை பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
தம் உரையில், டத்தோ ஏ.கோகிலன் பிள்ளை பக்தர்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும்,
“இந்தியாவிற்கு வெளியே சபரிமலைக்கு அதிகபட்ச யாத்திரிகர்கள் செல்கின்ற நாடு மலேசியா என்பதில் நாம் பெருமைப் படவேண்டும். எதிர்கால மாநாடுகளில் மலேசியா மற்றும் இந்தியாவைத் தவிர பிற நாடுகளிலிருந்தும் அதிகமான பங்கேற்பாளர்கள் இணைவது சிறந்த முன்னேற்றமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்






