என் தமிழ்

பி.பி.பி. மகளிர் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

கோலாலம்பூர், 05 ஜூலை 2025 : மகளிர் பி.பி.பி. மலேசியாவின் முக்கிய கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, பி.பி.பி. மலேசியா தேசிய தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை பிபிபி தேசிய தலைவர் டத்தோ லோகபாலா அவர்கள் நேரில் தலைமைத்துவமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தின் போதே, கட்சி மகளிர் உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தேசிய தலைவர் டத்தோ லோகபாலா அவர்கள் வழங்கிய ஆழ்ந்த ஆலோசனைகள் மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் அனைவருக்கும் தீவிர உற்சாகத்தை ஏற்படுத்தின.

“மகளிர் பி.பி.பி. மலேசியா, பெண்களின் பங்களிப்பை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த உறுதியாக உள்ளது. நமது ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு, கட்சியின் வளர்ச்சிக்கு வலிமையாக இருக்கும்” எனத் தெரிவித்தார் தேசிய மகளிர் தகவல் தலைவி திருமதி சண்டிராணி ஜொர்ஜரி

இந்த கூட்டம், மகளிர் பங்காற்றலின் முக்கியத்துவத்தையும், கட்சியில் அவர்களின் நிலையை மேலும் உயர்த்தும் முயற்சிகளையும் முன்னிறுத்தியது.

Scroll to Top