கோலாலம்பூர், 03 ஜூலை 2025 : விரைவு பேருந்து மற்றும் சுற்றுலா பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள், தாங்கள் அமர்ந்துள்ள இருக்கையின் பாதுகாப்பு பட்டையில் (seat belt) கோளாறு இருந்தால், MyJPJ செயலி மூலமாக நேரடியாக JPJ-க்கு புகார் அளிக்கலாம் என்று கோலாலம்பூர் சாலை போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹமிடி ஆதம் தெரிவித்தார்.
அத்துடன், புகார் அளிக்க மின்னஞ்சல் வழியும் பயன்படுத்தலாம். எனினும், விசாரணை எளிதாக நடைபெற பஸ்ஸின் பயண விவரங்கள், புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரம் உள்ளிட்ட தகவல்களும் அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை, பஸ் பயணத்தின் போது பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.





