கோலாலம்பூர், 03 ஜூலை 2025 : மலேசியாவைச் சேர்ந்த 12 பெண்களுடன் கூடிய மார்பக புற்றுநோய் பேட்லர் (Breast Cancer Paddlers) குழுவிற்கு, ஜேர்மனியில் விரைவில் நடைபெறவுள்ள 17வது IDBF உலக டிராகன் போட் போட்டியில் பங்கேற்பதற்காக, மலேசியக் கொடியை (Jalur Gemilang) இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா யியோ பெருமையுடன் ஒப்படைத்தார்.
இந்த வீராங்கனைகள் ‘பிங்க் சாதனையாளர் (Pink Challengers)’ என அழைக்கப்படுகின்றனர். மலேசியாவின் முதல் ப்ரெஸ்ட் கேன்சர் உயிர்தப்பிய பெண்கள் கொண்ட டிராகன் போட் அணியாக, 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்குழு, 2020ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறைக் கமிஷனரின் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.
ப்ரெஸ்ட் கேன்சர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் லிம்ஃபடீமா (lymphoedema) எனப்படும் வீக்கத்தைத் தடுக்கும் முக்கிய பயிற்சியாக பேட்லிங் (paddling) கருதப்படுகிறது. இக்குழுவின் பயணம், மருத்துவ ரீதியாகவும், சமூக ஊக்கத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
“வெறும் பதக்கங்களை வெல்லும் போட்டியாக இல்லாமல், மகளிர் வலிமை, நம்பிக்கை மற்றும் மாற்றத்திற்காக வேலையாற்றும் இந்த அற்புதமான குழுவை ஆதரிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை,” என ஹன்னா யியோ தெரிவித்துள்ளார்.
இந்த வீராங்கனைகளின் முயற்சியை ஆதரிக்கவும், மேலும் பல ப்ரெஸ்ட் கேன்சர் உயிர்தப்பியோர்களை ஊக்கப்படுத்தவும் விரும்புவோர் கீழ்காணும் வங்கிக் கணக்கில் தங்களால் இயன்ற அளவில் பங்களிக்கலாம்:
Kelab Perahu Naga Pink Challengers
CIMB Bank Berhad: 8010829246
மலேசியாவின் பெருமையோடு, இந்த வீராங்கனைகள் உலக அரங்கிற்கு பயணிக்கின்றனர் – வலிமை, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை சுமந்த பயணம் இது.






