நீலாய் , 18/06/2025 : எலிட் நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்த மோசமான விபத்தில் ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
விபத்து இன்று காலை 10.47 மணிக்கு, ELITE\@E6 நெடுஞ்சாலையின் 35.5-வது கிலோமீட்டரில் (வடக்கு திசை – C6 நிளை உத்தர முதல் பண்டார் சரீனியா வரை) இடம்பெற்றது.
அப்போது, பஞ்சரான டயர் காரணமாக ஒரு டிரெய்லர் அவசர வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், டிரெய்லர் ஓட்டுநர் PLUSline ஐ தொடர்பு கொள்ளாததுடன் எச்சரிக்கை அடையாளங்களும் வைக்கவில்லை எனத் தெரியவந்தது.
அந்த வழித்தடத்தில் சென்ற மோட்டார்சைக்கிள், முன்னின்ற டிரெய்லரின் பின்னே மோதியது. மோதி விழுந்த அந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் – ஒரு மலாய் வம்சாவளியினரான ஆண் – சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்று பராமரிப்பு குழு உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்து காரணமாக அவசர வழித்தடம் மூடப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து மந்தமாகியுள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் மற்றும் PLUS அதிகாரிகள் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





