என் தமிழ்

எஸ்எஸ்பிஎன் சேமிப்பு கணக்குக்கு 4.05% லாப ஈவு – 10 ஆண்டுகளில் அதிகபட்சம்

கோலாலம்பூர், 18/06/2025 : தேசிய உயர் கல்விக்கழக நிதி நிறுவனம் (PTPTN) Skim Simpanan Pendidikan Nasional (SSPN) சேமிப்புத் திட்டத்திற்கு 4.05% லாபவிகிதம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்த லாபவிகிதம் கடந்த 10 ஆண்டுகளில் பதிவாகியுள்ள உயர்ந்த அளவான லாபவிகிதமாகுமெனும் வகையில் இது பெற்றோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, கல்வி சேமிப்பை ஊக்குவிப்பதற்காக எங்கள் முன்னேற்ற முயற்சிகளின் பலனாகவே இந்த உயர்ந்த லாபவிகிதத்தை வழங்க முடிந்தது.

2024 ஆம் ஆண்டில், SSPN கணக்குகளில் மொத்தமாக 2.64 பில்லியன் ரிங்கிட் சேமிப்பு தேக்கமாக இருந்தது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 20% உயர்வாகும்.

SSPN என்பது பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒரு பாதுகாப்பான கல்வி சேமிப்பு முறைமையாகும். இது அரசாங்க வரிவிலக்கு, takaful பாதுகாப்பு மற்றும் PTPTN கல்விக் கடனுக்கான தகுதி போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

குறிப்பாக கல்வி செலவுகள் அதிகரித்து வரும் இந்நேரத்தில் PTPTN அனைவரையும் மீளாய்வு செய்யும் வகையில் SSPN சேமிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

மேல் விவரங்களுக்கு: [www.ptptn.gov.my] (https://www.ptptn.gov.my)

Scroll to Top