என் தமிழ்

மலேசிய இசை வரலாற்றில் புதியதோர் முயற்சி : அகரம் இசைப்பள்ளியின் “மங்கலப் பேரிசை” விழா

கோலாலம்பூர், 16/06/2025 : மலேசிய தமிழிசை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக, அகரம் இசைப்பள்ளி தனது மாபெரும் முயற்சியாக “மங்கலப் பேரிசை” எனும் இசை விழாவை ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிகழ்ச்சி வரும் 22.06.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று, கோலாலம்பூரிலுள்ள சோமா அரங்கத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மங்கல இசை என்பது திருமண விழாக்களில், சமூக நிகழ்வுகளில், மற்றும் ஆன்மிகச் சூழல்களில் வாசிக்கப்படும் ஒரு பாரம்பரிய இசை வடிவமாகும். அந்த இசையின் முக்கியத்துவத்தையும், அதனை வாசித்து வரும் இசைக் கலைஞர்களின் அர்ப்பணித்த உழைப்பையும் போற்றும் நோக்கத்திலேயே இந்த விழா நடக்கிறது.

அகரம் இசைப்பள்ளி நிகழ்வை உறுதியாக நடத்தி, மலேசியாவிலுள்ள இசை ரசிகர்களுக்கும் பாரம்பரிய இசையின் பொக்கிஷங்களுக்கும் இடையிலான பாலமாக செயல்பட முயல்கிறது. நிகழ்வில் பல்வேறு கலைஞர்கள் பங்கேற்று இசை நிகழ்வுகளை வழங்க உள்ளனர்.

மேன்மைமிகு இசை விரும்பிகள், கலை ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

Scroll to Top