என் தமிழ்

பல்நோக்கு நீர் தேக்க குளங்கள் அமைப்பதும் வெள்ள தடுப்பு முயற்சிகளில் ஒன்றாகும்

லண்டன், 26/04/2025 : நாட்டில் வெள்ளத் தடுப்பு முயற்சிகளில் ஒன்றாகவும், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும், பல்நோக்கு நீர் தேக்க குளங்களை அமைக்கும் அணுகுமுறையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அமைக்கப்படும் நீர் தேக்க குளங்கள், அதிக அளவிலான மழை நீரை சேமிப்பது மட்டுமின்றி, வரட்சி காலங்களில் நீரைச் சேகரித்து வைக்கவும் பயன்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.

நேற்று, லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் அங்குள்ள மலேசிய மக்களுடனான இரவு உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபடில்லா அதனை கூறினார்.

மாணவர்கள் உட்பட அரசாங்க நிறுவனங்கள் மற்றும் லண்டனில் உள்ள மலேசிய தூதரக ஊழியர்கள் என மொத்தம் 80 பேர் அதில் கலந்து கொண்டனர்.

மலேசிய வானிலையில் ஏற்படும் குறிப்பிடத்தக்க பருவநிலை மாற்றங்களின் விளைவாக தற்போது கனமழையால் வெள்ளம் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதால், வெள்ளத் தடுப்பு நடவடிக்கை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஃபடில்லா வலியுறுத்தினார்.

2050-ஆம் ஆண்டுக்குள் மலேசியா 70 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விகிதத்தை அடைவதற்கு உறுதிப்பூண்டுள்ள நிலையில், தற்போது அதன் விகிதம் 28 விழுக்காடு இருப்பதை, ஃபடில்லா சுட்டிக்காட்டினார்.

Source : Bernama

#UKMalaysia
#FadillahYusof
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top