பத்துமலை தமிழ்ப்பள்ளியில்  சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் 

பத்துமலை தமிழ்ப்பள்ளியில்  சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் 

பத்துமலை, 14/04/2025 : தமிழ் மாதங்களின் மகத்துவம் மற்றும் புத்தாண்டின் சிறப்புகள் குறித்து மாணவர் பருவத்திலே பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும் என்ற பல சீரிய முயற்சிகளை பத்துமலைத் தமிழ்ப்பள்ளி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பிறந்திருக்கும் விசுவாவசு ஆண்டை முன்னிட்டு பல்வேறு கலை அம்சங்களுடன் இன்று அப்பள்ளியில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கொண்டாட்டத்தின் முதல் அங்கமாக, மயிலாட்டம் மற்றும் கரகாட்டத்தோடு மாணவர்கள் தலைமையாசிரியரையும் இதர ஆசிரியர்களையும் முகம் மலர வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி செங்கல்ராயன், புத்தாண்டு கொண்டாடுவதன் நோக்கம் குறித்து தெளிவாக விவரித்தார்.

அதைத் தொடர்ந்து, பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் வண்ணம், மாணவர்கள் தங்களின் தனித் திறமைகளை இயல், இசை, நாடகத்தின் வழி வெளிப்படுத்தினர்.

சுமார் ஒரு மணிநேர கொண்டாட்டத்திற்குப் பின்னர் மாணவர்கள் தங்களின் கற்றல், கற்பித்தலைத் தொடர்ந்தனர்.

இதனிடையே, சத்யா சாய் பாபா, அம்பாங் கிளையின் ஏற்பாட்டில், இன்று காலையில் படிநிலை இரண்டில் பயிலும் 200 மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : Bernama

#SJKTBatuCaves
#TamilNewYear
#ChithiraiPuthandu
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews