முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி காலமானார்

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி காலமானார்

கோலாலம்பூர், 14/04/2025 : மலேசியாவின் ஐந்தாவது பிரதமராக பதவி வகித்த துன் அப்துல்லா அஹ்மட் படாவி அவர்கள் இன்று மாலை 07.10 மணிக்கு தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார்.

26 நவம்பர் 1939 இல் பிறந்த துன் அப்துல்லா அஹ்மட் படாவிற்கு 85 வயதாகிறது. 31 அக்டோபர் 2003 முதல் 03 ஏப்ரல் 2009 வரை துன் அப்துல்லா அஹ்மட் படாவி நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். அம்னோவின் 6 வது தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். கெபலா பாதாஸ் நாடாளுமன்ற தொகுதியை 8 முறை தொடர்ந்து வென்று சேவையாற்றியுள்ளார் துன் அப்துல்லா அஹ்மட் படாவி என்பது குறிப்பிடத்தக்கது.

#AbdullahAhmadBadawi
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews