திரெங்கானு, 18/01/2025 : மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான ஜோகூரின் Johor Darul Ta’zim – JDT 4-0 என்ற கோல்களில் திரெங்கானு எஃப்சியை நேற்றிரவு தோற்கடித்தது.
சொந்த அரங்கில் திரெங்கானு வெற்றிப் பெறும் என்று கணிக்கப்பட்ட வேளையில், ஒரு கோல் அடிக்க முடியாமல் அது திணறியது.
முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அண்களும் மாறி மாறி முயற்சி செய்தன.
அதில் ஜெடிதியின் முதல் கோல் ரோமல் மோரல்ஸ் வழி 17வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.
இரண்டாம் பாதியில் நுழைந்ததும் இரு அணிகளும் மீண்டும் கோல் அடிக்க ஆட்டத்தின் வேகம் அதிகமானது.
அதில் 79வது நிமிடம் ஜெடிதியின் இரண்டாம் கோல் போடப்பட்ட வேளையில் மூன்றாம் கோல் 84வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.
சுமார் 11 ஆயிரம் இரசிகர்கள் கூடியிருந்த திரெங்கானு அரங்கில், ஜெடிதி அதன் நான்காம் கோலை ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் போட்டது.
மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியின் இரண்டாம் அரையிறுதி ஆட்டம் வரும் பிப்ரவரி முதலாம் தேதி ஜெடிதியின் சொந்த அரங்கில் நடைபெறவுள்ளது.
Source : Bernama
#MalaysianSuperLeague
#FootballMatch
#SemiFinal
#TerengganuFC
#TFC
#JohorDarulTazim
#JDT
#Sukan
#Football
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia