பிரிக்பீல்ட்ஸ், 18/01/2025 : KVT கோல்ட் & டயமண்ட்ஸ் நிறுவனத்தின் KVT தஙகமாளிகை நகைக் கடை மூன்றாவது கிளை ஜி6, எண்.248, சென்ட்ரல் சூட்ஸ், லிட்டில் இந்தியா, ஜாலான் துன் சம்பந்தன், பிரிக்ஃபீல்ட்ஸ், 50470 கோலாலம்பூர் என்ற விலாசத்தில் இன்று 18/01/2025 பிரமாண்டமாக திறப்பு விழா கண்டது. டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.விக்னேஸ்வரன் – மஇகா தேசிய தலைவர், டத்தோஸ்ரீ டாக்டர். எம். சரவணன் – மஇகா தேசிய துணைத் தலைவர்
மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் டான் ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா – தலைவர் அறங்காவலர் – ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம், கோலாலம்பூர் மற்றும் திரு. ஸ்ரீதரன் – கார சாரம் குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பொது மக்கள், நகை வியாபாரிகள் என சுமார் 500 பேர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் அதன் உரிமையாளர் திரு தங்கதுரை அவர்கள்.
நாடு முழுதும் இருக்கும் இந்தியர்கள் தரமான புதிய டிசைனகளில் தங்கள் இல்ல திருமணம் போன்ற சுப நிக்ழ்வுகளுக்கு தங்க நகைகள் வாங்க பிரிக்பீல்டில் அமைந்துள்ள KVT தங்கமாளிகையை நாடலாம் என டத்தோ ஸ்ரீ M.சரவணன் கூறினார். மேலும் கடையின் உரிமையாளர் திரு தங்கதுரை மற்றும் பங்குதார்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
#KVTThangamaligai
#KVTGoldDiamonds
#DatukSeriMSaravanna
#TanSriSVigneswaran
#TanSriNadaraja
#KaaraSaaram
#BusinessNews
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia