கோலாலம்பூர், 17/01/2025 : வீடு புரொடக்ஷன்ஸ் டேனிஸ் குமார், முனைவர் விமலா பெருமாள் தயாரிப்பில் ஷான் இயக்கத்தில் சமேஷன் மணிமாறன் இசையில் உருவாகியுள்ள “தமிழ் ஸ்கூல் பசங்க” திரைப்படத்தின் சிறப்புக் காட்சி 16/01/2025 அன்று கோலாலம்பூரில் உள்ள GSC Lalaport திரையரங்கில் நடைபெற்றது. இந்த திரைப்படம் மலேசியா முழுவதும் எதிர்வருகின்ற 23/01/2025 அன்று திரைக்கு வருகிறது.
அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த சிறப்பு காட்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
டேனிஸ் குமார், குபேன் மகாதேவன், பென் ஜி, மலர்விழி பெருமாள், வித்யா லியனா, வீரசிங்கம், யாஸ்மின் நடியா, நளினா தேவி, நிர்மலர், லேஷாவீனி, விக்னேஷ் பெருமாள், டேவிட் அந்தோனி ஆகியோ நடித்துள்ள இந்த திரைப்படம் மலேசிய தமிழ் சமுதாயத்திற்கு தேவையான முக்கிய விஷயங்களை பேசும் திரைப்படமாக வந்திருக்கிறது. தமிழ்ப் பள்ளிகளில் இருக்கும் சிக்கல்கள் அங்கு நடைபெறும் பிரச்சனைகளை மையமாக கொண்டு மிக நேர்த்தியாக இந்த திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்கள் இயக்குநரும் படக் குழுவினரும்.
ம.இ.கா துணை தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ M.சரவணன் மற்றும் டத்தோ T.மோகன் ஆகியோர் இந்த சிறப்பு காட்சியை கண்டு திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர்.
முன்னதாக திரைப்படத்தில் பணியாற்றிவர்கள் மற்றும் அதரவளித்த நல் உள்ளங்களுக்கு தமிழ் ஸ்கூல் பசங்க திரைப்படக் குழுவினர் மேடையில் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினர்.
23/01/2025 அன்று திரைக்கு வரும் “தமிழ் ஸ்கூல் பசங்க” திரைப்படத்தை மலேசிய தமிழ் சமுதாய ஆதரவாளர்கள் கண்டு ஆதரவளிக்க திரைப்படக் குழுவினர் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். திரைப்படத்தில் கஸ்தூரி கதாபாத்திரம் அனைவர் மனதிலும் நீங்காத தாக்காத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
#TamilSchoolPasanga
#VeeduProduction
#DatukSeriMSaravanan
#DatoTMohan
#MalaysianMovie
#MalaysianTamilMovie
#TamilMovie
#GalaPremiere
#Movie
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.