சுபாங் ஜெயா, 16/01/2025 : இவ்வாண்டு துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் திருநாள் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டது.
ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். பொங்கல் விழாவில் சீனப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மலாய்ப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நம் கலை கலாச்சாரத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட பொங்கல் திருநாளில் பொங்கல் வைத்தல், கோலம் போடுதல், வர்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் உற்சாகத்துடன் கலந்து சிறப்பித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்கம் அனைத்து மாணவர்களுக்கும் வாழை இலையில் சைவ உணவு பரிமாறினர்.எல்லா வகையிலும் உதவி கரம் புரிந்த நல்லுங்களுக்குப் பள்ளியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Source : SJKT Tun Sambanthan FB
#SJKTTunSambanthan
#Pongal
#Pongal2025
#PongalInMalaysia
#SaraswathiKandasami
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia