சுட்டா தல எனக்கு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீடு கண்டது

சுட்டா தல எனக்கு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீடு கண்டது

சாய் நந்தினி மூவி வோர்ல்ட் தயாரிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வர இருக்கும் சுட்டா தல எனக்கு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி PU4LYF யூடியூப்பில் இன்று 01/01/2025 வெளியீடு கண்டது.

சாய் நந்தினி மூவி வோர்ல்ட் இன் நான்காவது திரைப்படமான சுட்டா தல எனக்கு திரைப்படம் தனேஷ் பிரபு இயக்கத்தில் எம். ஜெகதீஷ் இசையில் உருவாகி இருக்கிறது. விக்னேஷ் பிரபு, ஜீ குட்டி, சாம், ஷாம்ராஜ், ரிஷிகேசன், நிர்மலா, கதிர், பவித்ரன், பாலன் ஷாந்தனாதன், மோகன், கோவின் வெய்ல், தினேஷ், கோபால் ராமன் ஆகியோர் நடித்துள்ள சுட்டா தல திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுட்டா தல எனக்கு திரைப்படம் காமெடி கலந்த ஆக்‌ஷன் கேங்க்ஸ்டர் படமாக இருக்கலாம் என முன்னோட்டத்தை பார்க்‌கையில் தோன்றுகிறது. கலரிங் மற்றும் இசை வித்தியாசமாக இருக்கிறது.

திரைப்பட குழுவினருக்கு என தமிழ் வண்ணங்களின் வாழ்த்துக்கள்.

To Watch the Trailer Click Here

#SuttaThalaEnakku
#STE
#SNMW
#ThaneshPerrabu
#MalaysianTamilMovie
#TamilMovie
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia