ஷா ஆலம், 01/01/2025 : நவம்பர் மாதம் தொடங்கி நேற்று வரை மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்திற்கும் அதிகமான சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓட்டுநர் உரிமம் இல்லாத குற்றத்திற்கு மிக அதிகமான சம்மன்கள் அதாவது 38,754 சம்மன்கள் வெளியிடப்பட்டதாக, சாலை போக்குவரத்து துறையின் நடவடிக்கை மற்றும் திட்டமிடல் பிரிவின் துணை தலைமை இயக்குநர் டத்தோ ஜஸ்மனி ஷாஃபாவி தெரிவித்தார்.
சாலை வரி காலாவதியான குற்றமும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட வேளையில், வாகனத்திற்குக் காப்புறுதி இல்லாத குற்றமும் பதிவு செய்யப்பட்டதாக டத்தோ ஜஸ்மனி விவரித்தார்.
“2,000 ரிங்கிட்டிற்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அளிக்கும், 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 39-இன் கீழ் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதற்கு இளைஞர்களை அனுமதிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு எதிராக ஜே.பி.ஜே நடவடிக்கை எடுக்கலாம்”, என்று அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை இரவு, ஷா ஆலம் நெடுஞ்சாலை அவான் பெசார் டோல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் சிறப்பு சோதனை நடவடிக்கையை நிறைவு செய்து வைத்தப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த சிறப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 3,668 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 561 மோட்டார் சைக்கிளோட்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில், 66 பேர் போதைப்பொருள் உட்கொண்டது கண்டுப் பிடிக்கப்பட்டது.
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia