YOLO – சீன மொழித் திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

YOLO - சீன மொழித் திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

YOLO – Chinese Movie Review

அருமையான இந்த திரைப்படத்தை NetFlix இல் பார்க்க நேர்ந்தது. மிகவும் யதார்த்தமான நடிப்பு, நடைமுறைக்கு ஒத்து போகின்ற கதை மற்றும் திரைக்கதை ஆகியவை இந்த திரைப்படத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. ஒரு சோம்பேறியான நடுத்தர வயதுடைய பெண் எப்படி தனது வாழ்வில் சாதிக்க வேண்டும் என எண்ணம் கொண்டு அதில் வெற்றி பெறுகிறாள் என்பதை அழகாக காட்சி படுத்தி இருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் அவளுக்கு ஏற்படும் காதல், ஒரு தாய் மகளுக்கு இடையே இருக்கும் பாசம், தந்தை மகளுக்கு இடையே இருக்கும் உறவு, நடைமுறையில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் என பல விஷயங்களை இந்த திரைப்படம் பேசுகிறது. தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடைபெறும் குழப்பங்கள் பற்றியும் படத்தில் பேசியிருக்கிறார்கள்.

திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள Jia Ling இந்த திரைப்படத்திற்காக தனது எடையை 50 கிலோ குறைத்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பார்த்து ரசித்த உத்வேகம் தரக்கூடிய சிறப்பான திரைப்படம் YOLO

திரைப்படத்தை காண விரும்புவோர் NetFlix இல் Yolo கண்டுகளியுங்கள்.

#Yolo
#MovieReview
#Entamizh
#EntamizhVannangal