Salangai Poojai Solutions

Salangai Poojai Solutions

ஒரு பிரச்சனை எழுகிறது. பொதுவெளியில் அதை பற்றி பேசி பிரச்சனை ஆகிறது.
அந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு கலந்துரையாடல் நடைபெறுகிறது.
அதன் அடிப்படை விதியாக அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் பொதுவெளியில் மீண்டும் பிரச்சனை செய்யக்கூடாது என்பது தார்மீக பொறுப்பாக இருக்க வேண்டும். மீறி மீண்டும் பொது வெளியில் பிரச்சனையை பேசுவது என்பது கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களை மதிக்கவில்லை என்பதுதான் பொருள்படும். இதற்கு அந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்தவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு குட்டை யாரோ கல் எறிந்து கலங்குகிறது. அந்த குட்டை மீண்டும் தெளிவாக சற்று நேரம் கொடுக்க வேண்டும். அதை விடுத்து குழம்பிய குட்டையை மேலும் கலக்கி அதில் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என மீன் பிடிக்க முயல்பவர்களை இந்த சமூகம் அடையாளம் கண்டு ஒதுங்க வேண்டும்.

பரதக் கலை என்று இல்லை அனைத்து கலைகளிலுமே குரு சிஷ்ய உறவு மிகவும் முக்கியமானது. குருவின் மீது மாணவர்கள் வைத்திருக்கும் மரியாதையும் பக்தியும் மிகவும் முக்கியமானது. அதுவும் இந்திய கலைகள் அனைத்திலும் இந்த உறவு மிகவும் முக்கியமானது. இந்த மரியாதையை தகர்க்கும் விதத்தில் குருவை பொதுவெளியில் அசிங்கப்படுத்து. அவர் உன்னிடம் அதிகமாக காசு வாங்குகிறார். அதை பற்றி இன்னொரு குருவிடம் புகார் அளிக்குமாறு தூண்டுவதெல்லாம் அந்த அடிப்படை குரு – சிஷ்ய பாரம்பரியத்தையே கேல்விக்குறியாக்கும் ஒரு திட்டமிட்ட சதி. இதற்கு யார் துணை போனாலும் அவர்களும் இதற்கு உடந்தையே. நமது கலை மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்கும் என்பவர்கள், குருவிற்கு எதிராக இப்படி கலகம் செய் என தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது எந்த வகையில் சரியாக இருக்கும். குறிப்பிட்ட குருவின் ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா விட்டு வெளியேறி அடுத்த குருவை தேடுங்கள். அதை விடுத்து பொதுவெளியில் அசிங்கப்படுத்த வேண்டும் என நினைப்பது உங்கள் மீதான நம்பகத் தன்மையையும் கேள்விக் குறியாக்கும். மற்ற குருமார்களையும் பின்னொரு காலத்தில் நீங்கள் இப்படி அசிங்கப் படுத்த மாட்டீர்கள் என என்ன உத்தரவாதம் அளிக்க முடியும். இது வெறுமனே சலங்கை பூஜை கட்டணம் குறித்த பிரச்சனையாக மற்றும் பார்க்க முடியாது.

பரதக் கலை என்றைக்கு கோவில்களை விட்டு பொது வெளிக்கு வந்ததோ அப்போதே அதன் தன்மை மாறிவிட்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. முன்னர் அரசர்கள் கலையை பொருள் கொடுத்து வளர்த்தார்கள. அந்த அரச காலம் மாறிய பின்னர், கலைஞர்களே தங்களுக்கான வருமானத்தை தேடிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கலையை வளர்க்க வேண்டும் என்றால் கலைஞர்களும் வாழ வேண்டும் வளர வேண்டும். அதற்கு பணம் வேண்டும். குரு தட்சணை என்பது எந்த ஒரு கலைக்கும் முக்கியமான விஷயமாகும். இதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

மாதாந்திர கட்டணங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு கலை மையத்தை நடத்திட முடியுமா? சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்றம் என்பது ஒரு திருவிழா போன்றது. திருமணங்கள், திருவிழாக்களில் செல்விடப்படும் பணம் என்பது எதுவும் வீண் அல்ல, அதை நம்பி வாழும் பல குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் அவை. அப்படித்தான் ஒரு கலை என்பதும் அந்த கலையை சார்ந்த பல உழைப்பாளிகளுக்கான வருமானம்.

சலங்கை பூஜை என்னவெல்லாம் இருக்கிறது.
குரு
பாடகர்
பக்க வாத்தியம்
ஒப்பனை
அழைப்பிதழ்
அரங்கம்
அரங்க வடிவமைப்பு
ஒலி அமைப்பு
ஒளி அமைப்பு
புகைப்படம் மற்றும் காணொளி பதிவு
பூஜைகள்
வருகையாளர்கள் உணவு
கௌரவ விருந்தினர்களுக்கான பொன்னாடை பரிசுகள்

இவை மட்டுமல்லாமல் குரு சுமார் ஒரு மாத காலமேனும் மாணவர்களுக்கு பயிற்ச்சி கொடுத்து ஒத்திகை பார்க்க வேண்டும். இசைக் கலைஞர்களும் குறைந்தது 2-3 வாரங்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட வேண்டும். ஒலி, ஒளி அமைப்பாளர்களும் இரண்டு நாட்களாவது ஒத்திகையில் ஈடுபட வேண்டும். நிக்ழச்சி முடிந்த பிறகு அரங்கம் சுத்தம் செய்யப் படவேண்டும். இப்படி இன்னும் பல விஷயங்கள் இதில் இருக்கிறது.

சலங்கை பூஜை தேவையா. அதுவும் பகட்டான சலங்கை பூஜைகள் தேவையா. அந்த அந்த குருமார்கள் முடிவிற்கு இதை விட்டுவிடுவதுதான் இதற்கு ஒரே தீர்வு. ஒரு குருவின் வழிமுறைகளை குறித்து மற்ற ஒரு குருவோ அல்லது மற்றவரோ கருத்தோ அல்லது குறையோ சொல்வது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. இது ஒரு கலையின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது. மாறாக அந்த கலையை தரம் தாழ்த்துவதாகவே அமையும்.

சலங்கை பூஜையின் அவசியம் அல்லது பயன்கள்.
ஒரு கலையை பயிலும்போது பல்வேறு வகையான பயிற்கிகள் அவசியமாகிறது. அந்த வகையில் சலங்கை பூஜை என்பது எந்த வகையில் அவசியமாகிறது என பார்க்கலாம். பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே நடனமாடுவார்கள். பொது மக்களோ மற்ற குருமார்களோ அவர்களின் நடனத்தை காண வாய்ப்புகள் அமைவதில்லை. ஆனால் சலங்கை பூஜையில் மேடையில் நடனமாடுகையில் பொது மக்கள் மற்றும் பல குருமார்கள் முன்னிலையில் நடனமாடும் முதல் வாய்ப்பாக அது அமைகிறது. மேலும் அவர்கள் ஒரு பரீட்சைக்கு தயாராவது போல ஒரு மேடைக்கு தயாராகும் வாய்ப்பும் சலங்கை பூஜையின் போது கிடைக்கும். பலருக்கு இருக்கக்கூடிய மேடை பயம் என்பது விலகி அவர்கள் சகஜமாக நடனமாடவும் சலங்கை பூஜை ஒரு மாணவனை மனதளவில் பக்குவப்படுத்தும். மேலும் ஒரு குழுவாக நடனமாடுகையில் ஒருங்கிணைந்து நடனமாடும் பயிற்சியின் ஒரு மாணவருக்கு இதன் மூலம் கிடைக்கிறது. அரங்கேற்றம் என்கிற ஒரு முழு தேர்வுக்கு தயாராகும் ஒரு நடன மாணவருக்கு சலங்கை பூஜை என்பது ஒரு இடைநிலை தேர்வு மற்றும் ஒரு மதிப்பீட்டு முறையாகவும் அமைகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது

சலங்கை பூஜை வேண்டுமா, இசைக் கலைஞர்கள் வேண்டுமா, மண்டபம் வேண்டுமா போன்ற பல்வேறு கேள்விகளை அந்த அந்த குருமார்களின் முடிவிற்கே விட்டுவிடுவதுதான் அந்த கலைக்கும் கலைஞருக்கும் நாம் செய்யும் மரியாதையும் நன்மையும்.

ஒரு பிரச்சனையை பொதுவாக அணுக வேண்டும். அதில் தன்னை எப்படியேனும் முன்னிலை படுத்திக் கொள்ள வேண்டும் என பிரச்சனை செய்தவரிடமே சொல்லி தன்னை உயர்த்தி பேச வைப்பது என்பது ஒரு பொது சபை நாகரீகம் கிடையாது என்பது உரியவருக்கே புரிய வேண்டும். இதற்கு பெயர்தான் குழம்பிய குட்டையை மேலும் குழப்பி மீன் பிடிக்க முயல்வது என்பதாகும்.

Trollers will always be trollers until they are punished or ignored and shut down.

#SalangaiPoojai

@M’sia Barathanatya Sabha
Vehaara Arts Dance Studio
Tanjai Kamala Indira Dance School
Dakshra Fine Arts
Kelly Fine Arts
Vimarsagan Media விமர்சகன் மீடியா
Sugam Karnatica
Datta Guru Natyalaya Academy
House of Isai Heritaj
Devi Maheswaran Dance Studio
Laasya Arts Academy
Indrani Dance Academy
The Temple of Fine Arts Kuala Lumpur
Raaga Maalika Kalakendra
Puspa Dance Academy
Icanetwork.my
Suvarna Fine Arts
Angika Fine Arts – AFA
Nartaki Fine Arts
Subraanjali Dance Theatre
Mahavidya Dance Theatre
Persatuan Kebudayaan & Kesenian Warisan Malaysia
Kala Mandhir Dance Academy KMDA
Sri Raayar Fine Arts
Sharmala Bharatha Natya Acdmy
Jeya Nritha Kalalayam Dance Academy
Nadesha Bharatham DANCE Academy
Sri Kalanardini Kalalayam