பேராக் இந்திய வர்த்தக சபை ஏற்பாட்டில், உலகநேசன் இதழ் நான்காம் ஆண்டு அறிமுக விழா, மத்திய கல்வி துறை துணை அமைச்சர் பி.கமலநாதன் துவக்கி வைத்த போது எடுத்த படங்கள். விழாவில், பல வருடங்களாக பேரா இந்திய வர்த்தக சபை மேம்பாட்டில், சீறும் சிறப்புமாக வளர்ச்சி கண்டு வரும், இதன் தலைவர் கேசவன் முனுசாமி, மற்றும் மலேசிய கல்வி பணியில் பேரறிஞராகவும்,துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் கல்வி பருவத்தில் குருவாகவும், கன்னியாகுமரி முதல் கயிலாயம் மலைவரை வலம் வந்த கல்வி மான் உத்தமர் கு.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதினை, கல்வித்துறை துணை அமைச்சர் பி.கமலநாதன் வழங்கி சிறப்பித்தார். மேலும் ஈவு,இரக்கம் இல்லாத பண முதலாளிகளிடம் அல்லல் பட்டு, துன்பம் அனுபவித்து வரும் இந்திய தொழிலாளர்களை காப்பாற்றி தாயகத்திற்கு அனுப்பி வரும் மனித நேய மாமனிதர் த.கமலநாதன் அவர்களுக்கும், அமைச்சர் பாராட்டி பட்டயமும், பட்டாடையும் அணிவித்து வாழ்த்தினார். இவ்விழாவில் பேரா இந்திய வர்த்தக சபை சார்பில் தலைவர் கேசவன், உலகநேசன் இதழ் நிர்வாக ஆசிரியர் ஈ எஸ் மணிக்கு, பொன்னாடை, மாலை அணிவித்து அமரர் அப்துல்கலாமின் உருவம் பொறித்த அஞ்சல் தலை ஆல்பம் கொடுத்து பாராட்டினர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரும் உலகநேசன் இதழுக்காக ஆண்டு சந்தாதாரர்களாக பதிவு செய்துகொண்டனர். இந்நிகழ்வுகளை, ஆசிரியர் மணி மாணிக்கம் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில், 2014 இல் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உலகநேசன் இதழ் தொடக்க விழாவில் நடைபெற்ற நிகழ்வுகளும், மலேசியாவிற்கான, இந்தியா/தெற்காசிய நாடுகளின் உள் கட்டமைப்பு சிறப்பு தூதர் டத்தோஸ்ரீ, டாக்டர், உத்தாமா ச.சாமிவேலு அவர்கள், தமிழ் செய்திதாள்கள் குறித்தும், நிருபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் குறித்தும் உரையாற்றிய காணொளி காட்சி திரையில் காண்பிக்கப்பட்டது.