மத்திய மேம்பாட்டு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இன்று 19/03/2017 அன்று செலாயாங் கொமுனிதி கல்லூரியில் சமூக ஊடக மேலாண்மை, அடிப்படை அறிக்கை எழுத்துதல், புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் மற்றும் விளக்கப்படம் வடிவமைத்தல் ஆகியவற்றுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற்றது. ஊடக நிருபர்களுக்கான புதிய திறமை தேடலே இந்த பயிற்சி பட்டறையின் நோக்கமாகும்
இந்த பயிற்சி பட்டறையை டூன் தெம்ளரின் மத்திய மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஐஆர் முகமது நாசிர் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ம.இ.கா செலாயாங் தொகுதி தலைவர் திரு. MB ராஜா மற்றும் ட்யூன் ஸ்கிள் கல்லூரியின் (Tune Skill College) தலைவர் டத்தோ ரவிந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
விளக்கப்படம் மற்றும் வடிவமைத்தல் வகுப்புகளை அஜிம் அப்தும் ரஹிம் நடத்தினார். சமூக ஊடக மேலாண்மை, அடிப்படை அறிக்கை எழுதுதல், புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் ஆகிய வகுப்புகளை முகமது பௌசி ஹாஜி முகமது எடுத்தார். இந்த பயிற்சி பட்டறையில் சுமார் 30 நபர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.
#rakanmediaduntempler