ரஷ்யாவின் ஆதரவுடன் தடயங்களை அழிக்க கிளர்ச்சியாளர்கள் முயற்சி: உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்யாவின் ஆதரவுடன் தடயங்களை அழிக்க கிளர்ச்சியாளர்கள் முயற்சி: உக்ரைன் குற்றச்சாட்டு

pla

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 298 பேரும் பலியாகினர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால், சம்பவ இடத்தை பார்வையிட சர்வதேச குழுவினரை அனுமதிக்காமல் கிளர்ச்சியாளர்கள் தடை விதித்துள்ளதால் அவர்கள் மீது உக்ரைன் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.

விமானம் விழுந்த இடத்தில் ரஷ்யாவின் ஆதரவுடன் தடயங்களை அழிக்கும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. 

“சர்வதேச குற்றத்திற்கான ஆதாரம் என்பதால் அவற்றை அழிக்க முயற்சி செய்கின்றனர். 38 உடல்களை கிளர்ச்சியாளர்கள் அப்புறப்படுத்தி அவர்களே பிரேத பரிசோதனை செய்யப்போவதாக கூறுகின்றனர். உக்ரைன் விசாரணைக்குழுவினரை அந்த பகுதிக்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர்” என்று உக்ரைன் செய்தி வெளியிட்டுள்ளது.