தேர்தலில் போட்டியிட ராஜபக்சேவுக்கு தடை இல்லை

தேர்தலில் போட்டியிட ராஜபக்சேவுக்கு தடை இல்லை

mahinda-rajapaksa1

நவம்பர் 12, இலங்கையில் 2005ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவியில் உள்ள ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளார். அவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில், அதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே 2015 துவக்கத்தில் தேர்தலை நடத்த அவர் விரும்புவதாகத் தெரிகிறது.

ஆனால், இரண்டு முறை அதிபராக இருந்தவர் மூன்றாவது முறை போட்டியிட நினைப்பது சட்டவிரோதம் என்று முன்னாள் தலைமை நீதிபதி சரத் சில்வா கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சிகளும் ராஜபக்சேவின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, அதிபர் தேர்தலில் மூன்றாவது முறை போட்டியிடுவதற்கு தடை ஏதும் உள்ளதா? என அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் ராஜபக்சே கருத்து கேட்டிருந்தார். இதனை ஆராய்ந்த 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மூன்றாவது முறையும் அதிபர் தேர்தலில் ராஜபக்சே போட்டியிட முடியும் என்று அறிவித்தனர். இந்த தகவலை மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.