புதிய பயணம் திரைப்படம் – புதியவர்களின் முயற்சி

புதிய பயணம் திரைப்படம் - புதியவர்களின் முயற்சி

puthiyapayanamposter_2

புதிய பயணம் புதிய மலேசிய தமிழ் திரைப்படம் நேற்று 20/07/2017 மலேசிய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரேவன் இயக்கத்தில் SB புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் விமர்சனம் என பார்த்தால் நிறை குறைகளுடன் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இயக்குநர் நடிகர்கள் இசை அமைப்பாளர் என அனைவரும் புது முகங்களே. இதற்காகவே இந்த படத்திற்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு பெரிய சபாஷ் போடலாம்.

கதை களம் என்பதும் சற்று வித்தியாசமானது. வழக்கமன காதல் அல்லது பழிவாங்கும் கதையாக இல்லாமல் தன்னை சேர்ந்தவர்களுக்காக விளையாட்டில் ஓட்டப் பந்தயத்தில் சாதிக்கும் ஒரு இளைஞனின் கதைதான் புதிய பயணம். வித்தியாசமான கதைதான் என்றாலும் காதல் போட்டி பொறாமை என அங்கங்கே இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் பலம் என்று பார்த்தால் நந்தகுமாரின் கேமராவும் எட்வினின் இசையும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. கதையும் வித்தியாசமாக இருக்கிறது. புதியவர்களே ஆனாலும் நடிகர்கள் அனைவரும் சிறப்பாகவே செய்திருக்கின்றனர். குறை என்றால் திரைக்கதை தான். நீளம் சற்று அதிகமாக இருப்பதால் படத்தில் சற்று தொய்வு ஏற்படுகிறது. டைரக்‌ஷனிலும்  எடிட்டிங்கிலும் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். ரேவன் ஒரு நடிகராக வெற்றி பெற்றுவிட்டார். இயக்கம் என்பது ஒரு கப்பலின் கேப்டன் போன்றது. அதில் அவர் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். பாடல் வரிகள் இனிமையாக இருக்கின்றன.

புதியவர்கள் என்பதால் அவர்களின் அனுபவமின்மை சில இடங்களில் தெரிகிறது. முதல் முயற்சி என்பதால் கண்டிப்பாக இவர்களின் பயணத்தில் அடுத்த முயற்சிகள் இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புவோமாக.

புதிய பயணம் இன்னும் பயணிக்க வேண்டி இருக்கிறது. வாழ்த்துகள்.