பறவைக் காய்ச்சல் பரவலை கட்டுபடுத்த 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழு-அமைச்சர் அறிவிப்பு.

பறவைக் காய்ச்சல் பரவலை கட்டுபடுத்த 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழு-அமைச்சர் அறிவிப்பு.

7

தமிழகத்தில் பறவைக் காய்ச்சலை எதிர்கொள்ளும் வகையில் 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முட்டை மற்றும் கோழித் தீவனம் மூலம் பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பறவைக் காய்ச்சலை எந்தச் சூழ்நிலையிலும் எதிர்கொள்ளும் வகையில் 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக் கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய தொலைபேசி எண்கள் (044-24339097, 9445032504) குறித்தும், சைதாப்பேட்டை மத்திய தோல் ஆய்வுக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு பற்றியும் அமைச்சர் ஆய்வு செய்தார்.