சசிகலா ஜெயிலுக்கு போய்விட்டதால் போட்டி இப்போது பன்னீர்செல்வத்துக்கும் பழனிச்சாமிக்குமாக மாறியிருக்கிறது

சசிகலா ஜெயிலுக்கு போய்விட்டதால் போட்டி இப்போது பன்னீர்செல்வத்துக்கும் பழனிச்சாமிக்குமாக மாறியிருக்கிறது

dc-cover-o7nol0m85ekgurjs2ussr4vgd2-20170215024512-medi

 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. திருமதி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரில் கோர்ட்டில் சரணடைந்து ஜெயில் அடைக்கப்பட்ட பிறகும் குழப்பம் தீரவில்லை.

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் திரு. எடப்பாடி பழனிச்சாமியை தங்களது சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்து அதற்கான கடிதத்தை திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக பொறுப்பு ஆளுநரான மாண்புமிகு வித்யாசாகர் ராவ் அவர்களிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை போரியுள்ளார்.

சசிகலா Vs பன்னீர்செல்வம் என இருந்த மோதல் களம் இப்போது பன்னீர்செல்வம் Vs. பழனிச்சாமி என காட்சிகள் மாறியிருக்கிறது. இன்னும் எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியலில் ஒரு நிலையற்ற தன்மையே நிலவுகிறது. ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என அனைவரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.