ம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்

ம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்

18october_deepavaliopenhouse_najib_15

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய வளாகத்தில் ம இ கா ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நாஜிப் துன் ரசாக் கலந்து சிறப்பித்தார்.

ம இ கா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் மற்றும் ம இ கா பிரமுகர்கள் பிரதமரை வரவேற்றனர்.

இந்நாட்டில் பண்டிகை காலங்களில் நடத்தப்படும் இதுபோன்ற திறந்த இல்ல பொது உபசரிப்புகள் பல இன மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும், ஒற்றுமை உணர்வையும் மேம்படுத்த பெரிதும் உதவுவதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாரிசான் நேசனல் உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள், ம இ கா வின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் என சுமார் 10,000 பேருக்கு அதிகமாக கலந்து கொண்டனர்.

18october_deepavaliopenhouse_najib_1 18october_deepavaliopenhouse_najib_2 18october_deepavaliopenhouse_najib_3 18october_deepavaliopenhouse_najib_5 18october_deepavaliopenhouse_najib_6 18october_deepavaliopenhouse_najib_7 18october_deepavaliopenhouse_najib_8 18october_deepavaliopenhouse_najib_9 18october_deepavaliopenhouse_najib_11 18october_deepavaliopenhouse_najib_12 18october_deepavaliopenhouse_najib_13 18october_deepavaliopenhouse_najib_14 18october_deepavaliopenhouse_najib_17 18october_deepavaliopenhouse_najib_18 18october_deepavaliopenhouse_najib_20 18october_deepavaliopenhouse_najib_21 18october_deepavaliopenhouse_najib_22 18october_deepavaliopenhouse_najib_23 18october_deepavaliopenhouse_najib_24

Comments are closed, but trackbacks and pingbacks are open.